2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வேட்டையன் சண்டை காட்சிகளில் அசத்தும் சூப்பர் ஸ்டார்!

Freelancer   / 2024 மே 09 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வரும் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பலர் நடிக்கின்றனர்.

ரஜினிகாந்தின் 170ஆவது திரைப்படமான இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமன்றி பல்வேறு வெளிநாடுகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் ஏழு நாட்கள் நடைபெற உள்ளது.

தற்போது 4 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வெளிநாட்டவருடன் ரஜினிகாந்த் சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டை காட்சிகளில், அவரின் நடிப்பு மிகவும் அசத்தலாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X