2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வைத்தியசாலையில் ஷாரூக்கான் அனுமதி

Mayu   / 2024 மே 23 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

திடீர் உடல் நலக் குறைவு காரணமாக பிரபல ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஷாரூக்கானுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வைத்தியசாலையில்ப புதன்கிழமை (22) அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதிகப்படியான வெப்பம் மற்றும் நீர் இழப்பு காரணமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான். இவர் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் ஷாரூக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் சுற்றை வெற்றி பார்ப்பதற்காக தனது குடும்பத்தினருடன் அகமதாபாத்தில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், அவர் உடல் நலக் குறைவு காரணமாக மவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தறபோது அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்,  ரசிகர்கள், திரையுலகினர் அச்சப்படும் அளவுக்கு பாதிப்பு இல்லை என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X