2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஷிவானியை காணோமே ரசிகர்கள் அதிர்ச்சி

Editorial   / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக் பாஸ் 4 முதல் நாளின் 3ஆவது ப்ரொமோ வீடியோ தற்போது வெளிவந்து இருக்கிறது.

பிக் பாஸ் நான்காவது சீசன் முதல் நாளான இன்று எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். 

16 போட்டியாளர்களில் உண்மையான குணம் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள அவர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இன்று ஏற்கெனவே 2 ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு வீடியோ வெளிவந்திருக்கிறது. 

முதல் ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் காலையில் எழுந்தவுடன் கொண்டாட்டமாகவே மாஸ்டர் படத்தின் வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடி இருந்தனர். 

இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் ஷிவானி நாராயணனை சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் டார்கெட் செய்து தாக்கி பேசியது காட்டப்பட்டு இருந்தது.

தற்போது வெளிவந்திருக்கும் மூன்றாவது ப்ரொமோ வீடியோவில் பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் இணைந்து ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். 

அவர்கள் விளையாடும் போது முதலில் ரம்யா பாண்டியன் அறந்தாங்கி நிஷாவை அவுட் ஆக்குகிறார். அதற்குப் பிறகு அறந்தாங்கி நிஷா விளையாடும் போது கீழே தவறி விழுந்து விடுகிறார். 

இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் போட்டியாளர்கள் ஷிவானி நாராயணனை அதிகம் விமர்சிப்பது போல காட்டப்பட்டிருந்த நிலையில், இவர்கள் விளையாடும் போது அவர் பங்கேற்கவில்லை என்பது வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X