Editorial / 2020 ஒக்டோபர் 06 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று ஒளிபரப்பான முதல் நாள் காட்சிகளில் ஷிவானியை மற்ற போட்டியாளர்கள் பலரும் சேர்ந்து டார்கெட் செய்து அவர் மீது பல்வேறு குறைகளை கூறி இருக்கின்றனர்.
பிடித்தவர்கள் மற்றும் பிடிக்காமல் போனவர்கள் என தேர்ந்தெடுத்து ஹார்ட் அல்லது ஹார்ட் ப்ரேக் கொடுக்க வேண்டும் என கூறப்பட்ட போது பெரும்பாலான போட்டியாளர்கள் ஷிவானிக்கு தான் ஹார்ட் ப்ரேக் கொடுத்தனர்.
அவரது கையில் அதிக அளவு ஹார்ட் ப்ரேக் தான் பதிக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்து அவரே கலக்கமடைந்து இருப்பது இன்றைய ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.
தன் கையில் மொத்தம் 9 ஹார்ட் ப்ரேக் இருப்பதை ஷிவானி எண்ணிக்கொண்டு இருப்பதை பார்த்த பாலாஜி முருகதாஸ் மற்றும் சோம் ஆகியோர் ‘ஜாலியாக இருங்க ஷிவானி.. எவ்ளோ ஃபேன்ஸ் இருக்காங்க இன்ஸ்டாகிராம்ல.. என்ன நெனைப்பாங்க சொல்லுங்க’ என சொல்கிறார்கள்.
அதன் பின் ஷிவானி நடிகர் ஆரி உடன் பேசிக்கொண்டு இருக்கும்போது, ‘நான் எந்த கேம் பிளான் இல்லாமல் தான் வந்து இருக்கேன். எனக்கு தோன்றுவது என்ன, எனக்கு வருவதை தான் பண்ணிக்கொண்டு இருக்கேன்’ என கூறுகிறார்.
அப்போது ஆரி ‘டெய்லி ஒரு வீடியோ போடுறீங்க இல்ல.. என்ன ஆகணும் என்பதற்காக அதை போடுறீங்க’ என ஷிவானியிம் கேட்கிறார்.
இதற்கு ஷிவானி என்ன பதில் சொல்லி இருப்பார் என தெரிந்துகொள்ள தற்போது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
#Day2 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/fMoZ4rHaUy
— Vijay Television (@vijaytelevision) October 6, 2020
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .