2025 மே 14, புதன்கிழமை

ஹெப்பி பேர்த்டே அனிருத்

George   / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிக குறுகிய காலத்தில் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இசைப்பயணம் செய்து வரும் அனிருத்,  இன்று தனது 26ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அவரது நண்பர்கள் மற்றும் திரையுலகினர்  பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய '3' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் அனிருத். முதல் திரைப்படத்திலேயே அவர்  இசையமைத்த  'வை திஸ் கொலைவெறி' பாடல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் மொழியை தெரியாதவர்கள் கூட அந்த பாடலின் டியூனுக்காக ரசித்தனர்.

முதல் திரைப்படத்திலேயே தனது முத்திரையை அழுத்தமாக பதிவு செய்த அனிருத் மிக குறுகிய காலத்திலேயே விஜய், அஜித் ஆகிய மாஸ் நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். விஜய் நடித்த 'கத்தி' மற்றும் அஜித் நடித்த 'வேதாளம்' ஆகிய திரைப்படங்களுக்கும் அவர் உருவாக்கிய பாடல்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன.

சிவகார்த்திகேயனுடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் அனிருத், 'எதிர்நீச்சல்,' மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு அவர் அடுத்து நடிக்கவுள்ள மோகன்ராஜா இயக்கும் திரைப்படத்துக்கும் இசையமைக்கவுள்ளார்.

தல 57, சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' உள்பட ஒருசில திரைப்படங்களில் தற்போது இசையமைத்து வரும் அனிருத், இசையுலகில் மிகப்பெரிய சாதனை செய்து மென்மேலும் புகழ் பெற இந்த இனிய பிறந்த நாளில் மீண்டும் ஒருமுறை அவரை வாழ்த்துகிறோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .