2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஹாட்ரிக் நோக்கி அதிதியின் பயணம்

Freelancer   / 2023 ஜூலை 24 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர், கார்த்தி நடித்த ’விருமன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற ’மாவீரன்’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் நடித்து வரும் மூன்றாவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் என்ற நகரில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதனை அடுத்து அதிதி சங்கர் உட்பட படக்குழுவினர் போர்த்துக்கல் செல்ல இருப்பதாகவும் அங்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படமும் வெற்றி பெற்றால் அதிதி ஷங்கருக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X