2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஹீரோவாக அறிமுகமாகும் நடிகை வனிதா மகன்

Freelancer   / 2024 ஜூலை 26 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நடிகையும் நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளுமான நடிகை வனிதாவின் மகனான விஜய் ஸ்ரீ ஹரி, நாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனது தாத்தாவின் கண்காணிப்பில் வளர்ந்த ஸ்ரீ ஹரி, வெளிநாட்டிற்கு சென்று சினிமா சம்மந்தமான படிப்பை முடித்துவிட்டு, குறும் படங்கள் எடுத்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது நாயகனாக களமிறங்கியுள்ளார். இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் மாம்போ. இப்படத்தில் நிஜ சிங்கத்தை நடிக்க வைத்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள விஜய் ஸ்ரீ ஹரிக்கு திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மாம்போ படத்தின் குசைளவ லுக் போஸ்டரை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

மேலும், ஹீரோவாக அறிமுகமாகியுள்ள விஜய் ஸ்ரீ ஹரி, கார்த்தி நடிப்பில் வெளிவந்த சகுனி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X