J.A. George / 2021 ஒக்டோபர் 26 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொலிவுட்டில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான அலெக் பால்ட்வின் நடித்து, இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'ரஸ்ட்'. நியூ மெக்ஸிகோவின், சாண்டா ஃபே பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இதில் படப்பிடிப்புக்காக போலியான ஒரு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது. வெடித்தால் சப்தம் மட்டும் வருவது போன்ற அந்தத் துப்பாக்கியை நடிகர் அலெக் பால்ட்வின் இயக்கியபோது உண்மையாகவே அதிலிருக்கும் குண்டு பாய்ந்து விட்டது.
இதில் ஒளிப்பதிவாளரான ஹலினா ஹட்சின்ஸ் மரணமடைந்தார். இயக்குநர் ஜோயல் சோஸா படுகாயங்களுடன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் ஹொலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பொலிஸார் படக்குழுவினரிடம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அலெக் பால்ட்வின் தான் நடிக்க வேண்டிய அனைத்து திரைப்படங்களின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது விபத்து தான் என்று விசாரணையில் தெரியவந்திருந்தாலும் அலெக் பால்ட்வின் சிறிது காலம் தனது குடும்பத்துடன் இருக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
17 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago