2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

புலி உறுப்பினர் மேன்முறையீடு

Editorial   / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரால், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது

விடுதலைப்புலி உறுப்பினர், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சட்டரீதியானதென, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் வழங்கிய கட்டளையை சவாலுக்கு உட்படுத்தியே, இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   

சட்டத்தரணி காலிங்க ரவிந்திரவின் ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்படி மேன்முறையீட்டு மனு, புலிகள் அமைப்பின் எறிகணைப் படையணியின் முன்னாள் பிரபல்யானமானவரான புவலன் என்றழைக்கப்படும் இராசதுரை ஜெகன் சார்பிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   

2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி, பலாலியிலிருந்து இரத்மலானைக்குப் பறந்துகொண்டிருந்த அன்டனோவ்-32, வில்பத்துவ சரணாலயத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணை தாக்குதலில் தலாவ வீரவெவ பிரதேத்தில் சுட்டுவீழ்த்தப்பட்டது.   

இதனால், ரஷ்ய விமானி மற்றும் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 31 பேர் பலியாகினர்.   

இந்த வழக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எறிகணைப் படையணியின் முன்னாள் உறுப்பினர்களான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை ஜெகன் மற்றும் நல்லாம் சிவலிங்கம் ஆகிய இருவருக்கு எதிராகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   

இந்த சம்பவம் தொடர்பில், அதிகுற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, விடுதலைப்புலிகள் அமைப்பின் எறிகளைப் படையணியின் பிரபலமான இருவரும், இம்மாதம் 25ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .