2022 ஜூலை 06, புதன்கிழமை

எம்.பியாக கீதா இருக்கமுடியாது

Editorial   / 2017 நவம்பர் 03 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்ஹ, நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்தும் இருக்கமுடியாதென, உயர்நீதிமன்றம், நேற்று (02) தீர்ப்பளித்தது.   

உயர்நீதிமன்றப் பிரதி நீதியசர் தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர்கள் அடங்கிய குழுவே, மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.   

இரட்டைப் பிரஜைவுரிமையைக் கொண்ட, கீதா குமாரசிங்ஹ, நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாதென, காலி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரணைக்கு உட்படுத்தியிருந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், கீதா குமாரசிங்ஹ எம்.பியாக பதவி வகிக்க முடி​​யாதென தீர்ப்பளித்திருந்தது.  

அந்தத் தீர்ப்பை எதிர்த்து கீதா குமாரசிங்ஹ, உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். அந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு உட்படுத்தியே, நீதிமன்றம் மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது.   
தீர்ப்பின் பிரதியை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறும், நீதியரசர்கள் குழாம், உயர்நீதிமன்ற பதிவாளருக்குக் கட்டளையிட்டுள்ளது.   

2015ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்றத்துக்குத் தெரிவான கீதா குமாரசிங்ஹ, சுவிற்ஸர்லாந்து பிரஜைவுரிமையையும் கொண்டுள்ளார் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .