2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

திருமலையில் வேளாண்மை அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

Niroshini   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்  

திருகோணமலை மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குச்சவெளி பிரதேசத்தில் இம்முறை  பெரும்போக வேளாண்மையில் அமோக விளைச்சல் பெற்றுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  

யுத்தத்தின் பின்னர் செய்கை பண்ணப்படாதிருந்த வயல் நிலங்கள்,  இம்முறை  பெரும்போக  செய்கையின்  போது,  குச்சவெளி, புல்மோட்டை, நிலாவெளி,  கும்புறுபிட்டி,  திரியாய்,  தென்னமரவடி,  இக்பால்நகர் விவசாயிகளினால்  ஆயிரக்கணக்கான ஏக்கர்  வயல் நிலங்கள் செய்கை பண்ணப்பட்டிருந்தது.   

ஆலங்குளம்,  கைநாட்டன்,  சமளங்குளம்,  செஞ்சாலி,  கொசவனறு,  நீலப்பநிக்கன்,  பெரியகுளம்  போன்ற இடங்கலில் நல்ல  விளைச்சல் கிடைத்துள்ளது.

 ஆனால், நெல்லை குறைந்த விலையிலே விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .