Janu / 2026 மே 13 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, ஒருவர் உயிரிழந்து 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள சமீபத்திய நிலைமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையின்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்குப் பகுதியிலேயே இந்த மரணம் பதிவாகியுள்ளது.
இரத்தினபுரி, காலி, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலையினால், ஒட்டுமொத்தமாக 62 குடும்பங்களைச் சேர்ந்த 203 நபர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் அனர்த்த அபாயத்தை எதிர்கொண்டுள்ள 7 குடும்பங்களைச் சேர்ந்த 17 நபர்கள் தற்காலிக பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் 39 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, ஒரு சிறு அல்லது நடுத்தர அளவிலான வணிக நிறுவனமும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலதிகத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

18 minute ago
38 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
38 minute ago
51 minute ago