2022 ஜூலை 07, வியாழக்கிழமை

இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Editorial   / 2020 ஏப்ரல் 13 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகெங்கும் கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாசா வெளியிட்டுள்ள இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த படம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளனர். 

எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் சுற்றுச்சூழல் மாசு கணிசமாகக் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வாகனப் பயன்பாடுகளின் குறைவு மற்றும் தொழிற்சாலைகள் மூடல் ஆகியவற்றின் காரணமாக காற்று மாசுபாடு கணிசமாகக் குறைந்துள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இந்த நிலையில், நாசா வெளியிட்டுள்ள அண்மைய செயற்கைக்கோள் தரவுகளின்படி, வடகிழக்கு அமெரிக்கா முழுவதும் காற்று மாசுபாடு கடந்த சில வாரங்களில் சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், உலகின் ஏனைய பகுதிகளையும் நாசா விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2015 முதல் 2019 மார்ச் வரையிலான காலகட்டத்தில் காற்று மாசுபாட்டை இந்தப் படம் காட்டுவதாகக் கூறப்பட்டுள்ளது. 

எது எப்படியிருப்பினும், இந்தச் செயற்கைக்கோள் படம் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காற்று மாசுபாடு எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .