2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

வானிலை முன்னறிவிப்பு

Janu   / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(2026 ஏப்ரல் 22ஆம் திகதிக்கான முன்னறிவிப்பு, 2026 ஏப்ரல் 21ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது)

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பலத்த மழைவீழ்ச்சி: மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பனிமூட்டமான நிலை: மத்திய, சபரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

முன்னெச்சரிக்கை: இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை: மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்.

காற்று: காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

மழைவீழ்ச்சி அளவு (மி.மீ) விளக்கம்:

சிறிதளவு: 00-12.5

மிதமானது: 12.5-50

ஓரளவு பலத்த மழை: 50-100

பலத்த மழை: 100-150

மிகப் பலத்த மழை: 150 க்கும் அதிகமானது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .