2026 ஜனவரி 21, புதன்கிழமை

வளியின் தரம் குறைந்துள்ளது

Editorial   / 2026 ஜனவரி 21 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு உட்பட பல பகுதிகளில் வளியின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் (NBRO) எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவி வரும் வரட்சியுடனான காலநிலையால் செவ்வாய்க்கிழமை (21) தரம் குறைந்துள்ளது.

இன்றையதினம் காலை நிலவரப்படி, பின்வரும் பகுதிகளில் வளியின் தரச் சுட்டெண் (AQI) ஆரோக்கியமற்ற (Unhealthy) நிலையை எட்டியுள்ளது:ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை, பொலன்னறுவை, அநுராதபுரம், வவுனியா, புத்தளம் மற்றும் காலி ஆகிய இடங்களில்  வளியின் தரம் குறைந்துள்ளதால், பொதுமக்களுக்குச் சுவாசக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பின்வரும் உணர்திறன் மிக்கவர்கள் (Sensitive Groups) அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும்.

சிறுவர்கள் மற்றும் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும்  ஆஸ்துமா அல்லது இதயம் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள். சுவாசக் கோளாறுகள் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். வெளியில் செல்லும்போது தகுந்த முகக்கவசங்களை (N95 போன்றவை) அணிவது சிறந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X