2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

அமெரிக்கத் தடையைத் தவிர்த்த TikTok

Editorial   / 2026 ஜனவரி 23 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

TikTok செயலி அமெரிக்காவில் தான் தடை செய்யப்படுவதைத் தவிர்க்க அமெரிக்க நிறுவனங்களுடனும் அனைத்துலக நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

அதன்படி அந்தச் செயலியை நிர்வகிக்கும் ByteDance நிறுவனம் அதில் 19.9 விழுக்காட்டுப் பங்கைக் கொண்டிருக்கும்.

எஞ்சிய பங்குகளை அமெரிக்க முதலீட்டாளர்களும் அனைத்துலக முதலீட்டாளர்களும் வைத்திருப்பர்.

தேசியப் பாதுகாப்புப் பற்றிய கவலைகளால் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் TikTok செயலியை தமது நாட்டில் தடைசெய்ய முயன்றார்.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இழுபறிக்கு ByteDance நிறுவனம் இப்போது தீர்வை எட்டியிருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X