2021 மே 08, சனிக்கிழமை

இறந்து போன சிறுமியை உயிருடன் கொண்டுவந்த தொழிநுட்பம்! 4 வருடங்களுக்கு பிறகு இறந்த மகளை சந்தித்த தாய்

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நமக்கு நெருக்கமானவர்களின் இழப்பு தரும் துன்பம் மிகக் கொடியது. அப்படி நாம் இழந்த அன்பானவர்களை மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? அதை சாதித்துக்  காட்டியிருக்கிறார்கள் தென்கொரியாவை சேர்ந்த தொழில்நுட்ப குழு.

கடந்த 2016 ஆம் ஆண்டு நயோன் என்ற சிறுமி  அடையாளம்  தெரியாத ஒரு நோயால் இறந்துவிட, அவளது தாய் நயோனின் இழப்பை தாங்கமுடியாமல்  பரிதவித்து  வந்தார். 

இந்த தாய்க்கு மீண்டும் தன் மகளுடன் பேசுவதற்கு வி.ஆர் என்ற தொழில்நுட்பம் மூலம் உதவி செய்துள்ளது தென்கொரியாவை சேர்ந்த தொழில்நுட்ப குழு.

வி.ஆர் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறுமி நயோனின் உண்மையான உருவத்தை அப்படியே உருவாக்கி, அந்த தாயை மகளுடன் பேச வைத்துள்ளனர். 

நெஞ்சம் உருக வைக்கும் இந்த நிகழ்ச்சியை ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது தென்கொரியாவைச் சேர்ந்த ”Meeting You" என்ற திரைக்குழு.

நான்கு வருடங்களுக்கு பிறகு தனது மகளை பார்த்த அந்ததாயின் உணர்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. தன் மகள் கண் முன்னே தெரிந்தும் தொட முடியாமல் அந்த தாய் பரிதவிப்பதை பார்ப்போர் நெஞ்சங்கள் கரைந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X