Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் முழுவதுமுள்ள மக்களை, தொடர்பில் வைத்திருக்கும் பேஸ்புக்கின் இலக்கை மேம்படுத்தும் பொருட்டு, Messenger Lite எனும் புதிய செயலியை, இவ்வாரம், பேஸ்புக் அறிமுகப்படுத்தியிருந்தது. குறித்த Messenger Lite செயலியானது, அன்ட்ரொயிட் அலைபேசி இயங்குதளத்துக்கான, Messenger-இன் தனித்ததொரு பதிப்பாகும்.
Messenger-இன் குறுக்கப்பட்ட பதிப்பான Messenger Lite ஆனது, சராசரியான இணைய வேகத்துக்கு குறைவான இணைய வேகத்தை கொண்டிருக்கும், அடிப்படை அன்ட்ரொயிட் திறன்பேசிகளைக் கொண்டிருக்கும் சந்தைகளுக்கு, Messenger-இன் முக்கியமான வசதிகளை வழங்குகிறது.
Messenger Lite-இன் மூலம், Messenger அல்லது Messenger Liteஐ பயன்படுத்தும் எவருக்கும், இலகுவாக, தகவல், புகைப்படங்கள், இணையச் சுட்டிகளை அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு இணைய வேகங்களில் இயங்கும் பல்வேறு வீச்சங்களையுடைய அலைபேசி சாதனங்களில், ஒவ்வொரு மாதமும், ஏறத்தாழ, ஒரு பில்லியன் பேர் Messengerஐ பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், Messenger Lite-இன் மூலம், எந்த வலையமைப்பு நிலைமைகளை கொண்டிருக்கின்றார்கள் அல்லது அன்ட்ரொயிட் சாதனங்களில், எவ்வகையான சேமிப்பக வசதிகளைக் கொண்டிருக்கின்றார்கள் போன்ற காரணிகளைத் தாண்டி, மேலும் பலர் தொடர்பிலிருக்க முடியும்.
Messenger Lite ஆனது 10MBஐ விடக் குறைந்தது. எனவே, விரைவாக நிறுவிக் கொள்ள முடியும் என்பதுடன், விரைவாக அதைப் பாவிக்க முடியும். Messenger Lite ஆனது Messenger-இன் அதே இலட்சினையையே பயன்படுத்துகிறது. எனினும், Messenger-இல் நீல நிறப் பின்னணியும் உள்ளே வெள்ளை நிறமும் காணப்படுகின்ற நிலையில், Messenger Lite-இல் வெள்ளை நிறப்பின்னணியும் அதனுள்ளே நீல நிறமும் காணப்படுகிறது.
இலங்கை, மலேஷியா, கென்யா, துனீஷியா, வெனிசுவேலா ஆகிய நாடுகளில் Messenger Liteஐ தற்போது தரவிறக்கக் கூடியதாகவிருக்கின்ற நிலையில், எதிர்வரும் மாதங்களில், ஏனைய நாடுகளில் அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago