2024 செப்டெம்பர் 14, சனிக்கிழமை

பார்வை மாற்றுத்திறனுள்ள புதிய ‘பார்பி பொம்மை’

Freelancer   / 2024 ஜூலை 24 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பார்பி பொம்மைகள் உலக அளவில் பரவலாக அறியப்படும் பிரபல பொம்மையாக உள்ளன. இவற்றை தயாரித்து வரும் மேட்டல் நிறுவனம் தற்போது பார்வை மாற்றுத்திறன் கொண்ட பார்பி பொம்மையை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பார்பி பொம்மைகளின் உலகம் மேலும் விரிவடைந்துள்ளது.

1959ஆம் ஆண்டு பார்பி பொம்மை அறிமுகமான நிலையில், தொடர்ந்து அவை, உலகம் முழுவதும் பிரபலமடைந்தன. பிரபலத்துக்கு ஏற்ப பார்பி பொம்மைகள் மீது விமர்சனங்களும் அதிகரித்தன.

யதார்த்தத்தை பார்பி பொம்மைகள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. நிறம் சார்ந்து பார்பி பொம்மைகள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. பார்பிகள் மனித இனத்தின் ஒரு குறிப்பிட்ட நிறத்தை தூக்கிப் பிடிக்கிறது. இதனால், குழந்தைகள் தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்படுகின்றன என்ற குரல்களும் வலுத்தன.

இதனைத் தொடர்ந்து பார்பி பொம்மைகளை வெளியிட்ட மேட்டல் நிறுவனம் மாற்றதுக்கு தயாரானது. 2016இல் ஆசியா, ஆபிரிக்கா அனைத்து இன நிறங்களை பிரதிபலிக்கும் பார்பி பொம்மைகள் வெளியிடப்பட்டன.

விபத்தில் காயமடைந்த பார்பி, சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் பார்பி, டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு கொண்ட பார்பி, வெண்புள்ளிகள் கொண்ட பார்பி என வெவ்வேறு பார்பிகள் வெளியாகின. இந்தச் சூழலில் தற்போது பார்வை மாற்றுத்திறன் கொண்ட பார்பி வெளியாகி உள்ளது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .