Mayu / 2024 நவம்பர் 04 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேஸ்புக் நிறுவனத்தில் பொறியியல் பிரிவுக்கு தலைமை வகித்து வந்த ஜே பாரிக்கை மைக்ரோசாப்ட் நிறுவனம் முக்கிய பதவியில் பணியில் அமர்த்தியுள்ளது, அமெரிக்க சிலிக்கான் வேலியில் முக்கிய விவாத பொருளாக உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி ஜே பாரிக், சத்ய நாதெல்லாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 11 ஆண்டு காலம் பேஸ்புக்கில் வேலை செய்தவர் ஜே பாரிக். அங்கே பொறியியல் பிரிவுக்கு தலைவராக அவர் பணியாற்றி வந்தார்.
2009 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தில் சேர்ந்த பாரிக் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் டேட்டா மையங்கள் ஆகிய பிரிவுகளில் முக்கிய பங்காற்றியவர். 2021 ஆம் ஆண்டில் அவர் பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லா, ஜே பாரிக்கை வரவேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு திறன்மிகு நபர்களை நிறுவனத்திற்கு கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது என கூறியுள்ளார்.
அந்த வகையில் தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சீனியர் லீடர்ஷிப் டீமில் ஒரு நபராக ஜே பாரிக் சேர்ந்துள்ளார், இதற்கு முன்பு அவர் மெட்டாவின் பேஸ்புக் நிறுவனத்திலும் லேஸ் ஒர்க் நிறுவனத்திலும் மிகச் சிறந்த பணியாற்றியவராக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப ரீதியிலும் வாடிக்கையாளர்களுக்கு சாதகமான தயாரிப்புகளை உருவாக்குவதிலும் சிறந்த அனுபவம் கொண்டவராக பரிக் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
பரிக்கின் வருகை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இன்னும் வலு சேர்க்கிறது என அவர் கூறியுள்ளார். பல ஆண்டுகளாகவே தனக்கு ஜே பாரிக்கை தெரியும் எனவும், தொழில்நுட்ப பிரிவில் மிகச்சிறந்த ஒரு ஆளுமையாக அவர் செயல்படுகிறார் என்றும் சத்ய நாதெல்லா கூறியுள்ளார்.
தொழில்நுட்பம் மட்டும் இல்லாமல் ஒரு தொழிலை தொடக்க நிலையில் இருந்து எப்படி வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் சிறந்த அனுபவம் கொண்டவர் என சத்ய நாதெல்லா புகழ்ந்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தது குறித்து ஜே பாரிக் தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் மைக்ரோசாப்ட் போன்ற ஒரு மிகச் சிறந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்வதில் மிக ஆர்வமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு தளத்தை நோக்கி வேகமாக மாறி வருகிறது இதன் ஒரு பகுதியாக நானும் என்னுடைய பங்களிப்பும் இருக்கப் போகிறது என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல்வேறு திறமைமிகு தலைவர்களிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள நான் ஆர்வமாக இருக்கிறேன் என ஜே பாரிக் கூறியுள்ளார்.
8 hours ago
22 Nov 2025
22 Nov 2025
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
22 Nov 2025
22 Nov 2025
22 Nov 2025