2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பேஸ்புக் ஊழியர்களுக்கு மெதுவான இணையம்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 28 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய ரீதியில் அலைபேசி சந்தைகளுக்கான செயலி, சேவைகளை விரிவுபடுத்தும் முகமாக பேஸ்புக்கானது, தனது ஊழியர்களுக்கு வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் காணப்படும் மெதுவான அலைபேசி இணைய வேகங்களை அனுபவிக்க விடும் வாய்ப்பொன்றை ஆரம்பித்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு வாரமும் “2G செவ்வாய்க்கிழமைகள்”  இடம்பெறவுள்ளது. இதன்படி பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் தமது பணியிடத்தில் பேஸ்புக்கில் இணையும் அதன் ஊழியர்களிடம், ஒரு மணித்தியாலத்துக்கு உங்களது இணைய வேகத்தை 2G ஆக மட்டுப்படுத்தப் போகின்றீர்களா என வினவப்படும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

இதன் மூலம், 2G இணைய வேகத்தைக் கொண்டிருக்கும் மக்கள் எவ்வாறு எமது தயாரிப்புக்களை பாவிக்கின்றார்கள் என நாங்கள் உணர்ந்து கொள்ள உதவும் என பேஸ்புக்கின் உற்பத்தி முகாமையாளர் கிறிஸ் மர்ரா தெரிவித்தார்.          


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X