2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

மின்காந்த அலைகள் மூலம் போர்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 15 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


எதிரிகளை நிலைகுலையச் செய்வதற்கு புதிய மின்னணு போர் உத்தியை செயல்படுத்த இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் வானியல் தொழிற்கழகம் வெளியிட்ட  வீடியோ ஒன்றிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

இத்தொழில் நுட்பமானது  எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் கருவிகள்மீது மின்காந்த அலைகளை ஒரே இடத்தில் குவியக்கூடிய கற்றைகளாக மாற்றுவதாகவும் இதன் மூலம் ரேடார், சென்சார் உள்ளிட்ட அமைப்புகளைச் சீர்குலைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் பாதுகாப்புச் செலவை பெருமளவு குறைக்கும் இத் தாக்குதல் அமைப்புக்கு பீம்ஸ் என இஸ்ரேல் அரசு பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X