2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

வாட்ஸ்அப்-இல் அறிமுகமான புது அம்சம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாட்ஸ்அப் செயலியில் வீடியோ கால் பேசும் போது, உங்களது சாதனத்தின் ஸ்கிரீனை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தினை மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

அதன்படி பயனர்கள் வீடியோ கால் பேசும் போது ஷேர் ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட செயலியோ அல்லது சாதனத்தின் முழு ஸ்கிரீனையோ ஷேர் செய்து கொள்ளலாம். ஷேர் செய்ய துவங்கியதும், உங்களது ஸ்கிரீனில் இடம்பெற்று இருக்கும் தகவல்கள் அனைத்தும் பகிரப்பட்டு, ஷேர் செய்வோருடன் பகிரப்படும். இதனை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .