2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

அனைவருக்கும் தடுப்பூசி: வட்ஸ் அப் செயலியின் புதிய முயற்சி!

Editorial   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளவில் பெரும்பாலானோர் வட்ஸ்அப்(whatsapp)  செயலியினைப் பயன்படுத்திவருகின்றனர்.

இச் செயலியின் மூலம் இலகுவாக அழைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடிவதுடன் புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் விரைவாக மற்றவர்களுக்கு அனுப்ப முடியும் என்பதால் இச் செயலியானது, பயன்பாட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

 இந் நிலையில் வட்ஸ் அப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியினை செலுத்திக் கொள்வது குறித்த விளிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

 அந்தவகையில் குறித்த ஸ்டிக்கர்கள் ”அனைவருக்கும் தடுப்பூசிகள் என்ற எண்ணக் கருவை விதைக்கும் வகையிலும், உலகெங்கிலும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மீது தங்கள் பாராட்டுக்களைக் தெரிவிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.
 

வட்ஸ்அப்  நிறுவனம் உலக சுகாதார ஸ்தாபனம்  மற்றும் யுனிசெஃப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து  அதன் உலகளாவிய பயனர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கொரோனாத் தொற்றுத் தொடர்பான தகவல் மற்றும் வளங்களை வழங்கிவருகின்றது.   

அந்தவகையில் குறித்த ஸ்டிகர் அம்சத்தினை உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து வட்ஸ் அப் நிறுவனம் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது..


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .