Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 17 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் முதல் காரை டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பசுமையான, தூய்மையான எரிபொருள் தீர்வுக்காகப் பன்னாட்டுத் தானியங்கித் தொழில்நுட்ப மையத்துடன் இணைந்து இந்திய அரசு மேற்கொண்ட முன்னோடித் திட்டத்தின் ஒருபகுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்ட மின்சார வாகனங்களில் ஒன்றான டொயோட்டாவின் மிராய் வகைக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 646 கிலோமீற்றர் வரை செல்லும் திறன்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இக் காரில் அதிக அழுத்தத்தைத் தாங்கும் ஹைட்ரஜன் எரிபொருள்தாங்கியும், மின்மோட்டாரும் உள்ளதால் ஹைட்ரஜனை நீராகவும் ஒக்சிஜனாகவும் மாற்றுவதன் மூலம் கார் ஓடுவதற்கான ஆற்றல் கிடைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக் காரில் உள்ள எஞ்சின், புகையை வெளியிடுவதற்குப் பதிலாக நீரை வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .