2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

விண்ணில் திரைப்படப் படப்பிடிப்பு

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 14 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


விண்ணில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் திரைப்பட படப்பிடிப்பொன்று நடைபெறவுள்ளது.

 இத்திரைப்படமானது ‘பெண் மருத்துவர் ஒருவர் விண்வெளி வீரருக்கு அவசர சிகிச்சை அளிக்க விண்ணில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டதாகக்‘  கூறப்படுகின்றது.


இந்நிலையில் இத்திரைப்படத்தின்  படப்பிடிப்பிற்குச் செல்வதற்காக இறுதித் தகுதித் தேர்வை ரஷ்ய குழுவொன்று அண்மையில்  எதிர் கொண்டது.

 இத் தேர்வில் இரண்டு நடிகைகள், இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் இரு விண்வெளி வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி விண்வெளிக்குச் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .