2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

சம்சுங் நிறுவனத்தின் புதிய தலைவராக ‘ஜெ ஒய் லீ‘ தெரிவு

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 30 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
 
சம்சுங் நிறுவனத்தில்ன புதிய தலைமை செயற்பாட்டு அதிகாரியாக ஜெ ஒய்.லீ( Lee Jae-yong)தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தென்கொரியாவைத்  தலைமையிடமாக கொண்டு செயற்பட்டு வரும் பிரபல  பன்னாட்டு நிறுவனமான சம்சுங், தொலைபேசி, தொலைக்காட்சி பெட்டிகள், ஏசி என்று மின்சாதன பொருள் விற்பனையில்  முன்னணியில் உள்ளது.

இந்நிலையில் அந்நிறுவனத்தின் புதிய தலைமை செயற்பாட்டு அதிகாரியாக 54 வயதான ஜெ ஒய். லீ அண்மையில் தெரிவு  செய்யப்பட்டுள்ளார்.
 
அவர் அந்நிறுவனத்தை  நிறுவிய லீ பியுங் பங் குடும்பத்தை சேர்ந்த 3வது தலைமுறை நபராவார்.
மேலும் ‘ஊழல் வழக்கில் 18 மாதம் சிறை தண்டனை அனுபவித்த நிலையில் தென்கொரிய அரசால் கடந்த ஓகஸ்ட் மாதம் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டவர் ‘என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .