2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

பைட் டான்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் இராஜினாமா

Editorial   / 2021 மே 20 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளம் சமூகத்தினர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற செயலியாக  டிக்டொக் செயலி காணப்படுகின்றது.

சீன செயலியான இது கடந்த 2016-ஆம் தொடங்கப்பட்டதோடு இச்  செயலி அறிமுகம் செய்யப்பட்ட ஒரே வருடத்திலேயே பல முன்னணி செயலிகளுக்கு போட்டியாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  இச் செயலியின் வெற்றிக்குக் காரணமான அதன் உரிமையாளரும் பைட் டான்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான ஸாங் யிமிங்  (Zhang Yiming)  தலைமை நிர்வாக அதிகாரி என்ற பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருக்குப் பதிலாக   அந் நிறுவனத்தின், மனிதவளத் தலைவரான லியாங் ரூபோ (Liang Rubo) பதவியேற்கவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .