Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 22 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோட்டார் வாகன உற்பத்தியில் ஜப்பானியர்கள் சிறந்தவர்கள் என முத்திரை பதித்துள்ளார்கள். இதனை மீண்டும் எடுத்துக்காட்டும் வகையில், டொயோட்டார் மோட்டார் கார் உற்பத்தி நிறுவனமானது 'டொயோட்டா பஃன் வீ 2' என்ற தனது புதிய உற்பத்தியை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இந்த புதிய உற்பத்தியானது, புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டதாகும். தொடுகை (டஸ் சிஸ்டம்) முறையில் செயற்படும் இந்த கார்கள், தொலைத்தொடர்பு மற்றும் செய்மதியினூடான ஆலோசனைகளுக்கு அமைய பயணிக்கக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அதி சொகுசுவாய்ந்த, சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இதனை வடிவமைத்துள்ள டொயோட்டா நிறுவனம், காரினுள்ளும் தொடுகை (டஸ்) முறையிலான திரைகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த திரைகள் கணனித் தொழில்நுட்பத்தினாலான திரைகளால் இயக்கப்படுகின்றன. இதனால் குறித்த காரில் பயணிக்கும் போது திரைப்படங்களை பார்ப்பதற்கும், பாடல்களைக் கேட்பதற்கும் இணைய வலையமைப்புக்குள் பிரவேசிப்பதற்கும் வசதிவாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
காரின் வெளிப்புறத் தோற்றத்தை தமக்கு விரும்பிய நிறத்திற்கோ அல்லது வடிவமைப்புக்கோ மாற்ற முடியும் என்பது இந்த 'டொயோட்டா பஃன் வீ 2' ரக காரின் முக்கிய அம்சமாகக் காணப்படுகின்றது. அத்துடன், வெளிப்புறத் தோற்றமும் கணனித் திரைக்கு சமனாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தவகை கார்களில் முன்பக்கமும் பின்புறமும் கண்ணாடிகள் காணப்படுவதில்லை.
'டொயோட்டா பஃன் வீ 2' தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் இதனை சந்தைக்கு அறிமுகப்படுத்திக் கொடுக்கும் போது மிகவும் விலையுயர்ந்த மோட்டார் காராக இது காணப்படும் என்ற டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
19 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
rifnas Friday, 30 December 2011 04:22 AM
namakku alto car vaankak kuda elaatu entha naadula eruntha.
Reply : 0 0
Faiyas Friday, 20 January 2012 09:09 PM
எச்செல்லேன்ட் வொர்க் லைக் இட்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago