Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
A.P.Mathan / 2011 ஜூன் 13 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தினமும் வேலைக்குச் செல்பவர்கள் வாகன நெரிசலில் சிக்கி வாழ்க்கை வெறுத்துப்போய் மீண்டும் வீடு திரும்புவது வழமையாகிவிட்டது. வெயிலில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது மேலும் வாழ்க்கை வெறுக்கும். பறந்து போகக்கூடிய மோட்டார் சைக்கிள் இருந்தால் எப்படி இருக்குமென அடிக்கடி தோணுவதுண்டு. அந்த கனவு இப்பொழுது நிஜமாகியிருக்கிறது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ் மல்லோய் என்னும் பொறியியலாளர் பறக்கும் மோட்டார் சைக்கிள் ஒன்றினை உருவாக்கியிருக்கிறார். ஹூவர்கிறாப் படகின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே இந்த ஹூவர் மோட்டார் சைக்கிளை அவர் உருவாக்கியிருக்கிறார்.
'ஸ்டார் வோர்' திரைப்படங்களில் அதிக நாட்டம்கொண்ட கிறிஸ், அதில் வருகின்ற பறக்கும் மோட்டார் சைக்கிள் போன்றதொன்னை நிஜத்தில் உருவாக்க விரும்பினார். அந்த நினைப்பில் உருவாகியதுதான் இந்த பறக்கும் மோட்டார் சைக்கிள்.
இந்த கண்டுபிடிப்பு பற்றி கிறிஸ் குறிப்பிடுகையில்... 'இந்த ஹூவர் மோட்டார் சைக்கிளை 10 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு சுமார் 270 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் செலுத்த முடியும். என்னுடைய கண்டுபிடிப்பான இந்த பறக்கும் மோட்டார் சைக்கிள் வெறும் 110 கிலோகிறாம் நிறையினையே கொண்டதுடன் 1170 சிசி இயந்திர வலுவினையும் கொண்டது..' என்று குறிப்பிட்டார்.
கிறிஸின் இந்த அற்புத கண்டுபிடிப்புக்கு முதலீடு செய்ய யாராவது முன்வருவார்களேயானால் தன்னால் மேலும் அரிய படைப்புகளை வழங்க முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பறக்கும் மோட்டர் சைக்கிள் சுமார் 40 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 43 லட்சத்தி 80 ஆயிரம் ரூபாய்) பெறுமதி வாய்ந்தமை என கணிக்கப்பட்டிருக்கிறது.
hisfullah Sunday, 12 February 2012 08:16 AM
i will try now.
Reply : 0 0
niyaz Monday, 29 October 2012 10:29 AM
அற்புதம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
41 minute ago
41 minute ago
48 minute ago