Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2012 ஜனவரி 01 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணைய உலகில் பல புதுமைகளை ஏற்படுத்திய கூகுள், தற்போதைய குளிர்காலத்தில் மற்றொரு விநோத அனுபவத்தை கூகுகள் பாவனையாளர்களுக்கு வழங்குகிறது. நம் கணினித் திரையில் பனி படரச் செய்யும் அனுபவமே அது.
கூகுள் தேடல் தளத்தில் let it snow (லெட் இட் ஸ்னோ) என டைப் செய்து தேடல் பொத்தானை சொடுக்கிவிட்டு சில விநாடிகள் காத்திருந்தால் அந்த கூகுள் தேடல் பக்கத்தில் செயற்கை 'பனி கொட்டுவதற்கு' ஆரம்பிக்கும்.
ஒரு நிமிடத்திற்குள் அப்பக்கம் முழுவதும் மேற்படி பனியினால் நிரம்பிவிடும். அதன் பின்னாலுள்ள எழுத்துக்களையோ படங்களையோ பார்ப்பதற்கும் முடியாது. பக்கம் முழுவதும் முற்றாக கருமையாகிவிடும்.
பனி படர்ந்த கண்ணாடியில் எழுதுவதைப் போல் இப்பக்கத்தில் மௌஸின் மூலம் எழுதவும் முடியும். ஆனால் கணினியில் நாம் திறந்து வைத்துள்ள வேறு பக்கங்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது.
சரி திரையில் இப்படியே 'பனி' படர்ந்துவிட்டால் நாம் எமது அலுவலை பார்ப்பது எப்படி என்கிறீர்களா? முற்றாக பனி படர்ந்தபின் Defrost (டீபுரொஸ்ட்) எனும் பொத்தான் தென்படும். அதை கிளிக் செய்தால் பனி மறைந்துவிடும். அனுபவித்துதான் பாருங்களேன்.
44 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
jeeshanmjf Tuesday, 03 January 2012 01:50 PM
இது மிகவும் அற்புதமாக உள்ளது.. இது அனைவரையும் கவரும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Reply : 0 0
Ilham Faiz Saturday, 07 January 2012 01:11 PM
இது வியப்பாக உள்ளது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago