2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

உலகின் மிகச்சிறிய பச்சோந்தி

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 20 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றிக் கொள்கின்ற மனிதர்களை பச்சோந்திகளுக்கு ஒப்பிடுவார்கள். உண்மையிலேயே இந்த பச்சோந்திகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் நிறங்களை மாற்றிக்கொள்ளும் தன்மையுடையவை. உலகில் வாழ்கின்ற ஊர்வனவில் மிகவும் அதிசயிக்கத்தக்க உயிரினமாக இது விளங்குகிறது.

இந்நிலையில், மடகஸ்கார் தீவில் ஆராய்ச்சி மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று உலகின் மிகச்சிறிய பச்சோந்தியை கண்டுபிடித்திருக்கின்றனர். 2.9 சென்டிமீற்றர் (சுமார் 1.1 அங்குலம்) நீளமுடைய இந்த பச்சோந்தி - இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பச்சோந்திகளில் மிகச்சிறியதாக இனங்காணப்பட்டிருக்கிறது. மூக்கு நுனியிலிருந்து வால் வரையான நீளமே 2.9 சென்டிமீற்றராகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X