2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பேஸ்புக்கில் புதிய மாற்றங்கள்

A.P.Mathan   / 2012 மார்ச் 01 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க்ரிஷ்)

சமூக இணையத்தளமான பேஸ்புக்கில் நேற்றைய தினம் முதல் மாற்றங்கள் சில ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை காலமும் தனிப்பட்ட கணக்குகளுக்கு மாத்திரம் வழங்கப்பட்டிருந்த டைம்லைன் வசதி, நேற்றுமுதல் பேஸ்புக் பக்கங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு புதிய விளம்பரங்கள் பற்றிய அறிவிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி சாதாரணமாக ஒருவரின் பேஸ்புக் கணக்கின் மூலம் உள்நுழைந்ததும் அவரது நியூஸ் ஃபீட் பகுதியில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. அத்தோடு வலதுபுறத்தில் சாதாரண விளம்பரங்களோடு பிறீமியர் விளம்பரங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் பேஸ்புக் அறிவித்துள்ளது. தவிர, கைத்தொலைபேசிகளுக்கான பேஸ்புக்கிலும், பேஸ்புக்கை பயன்படுத்திய பின்னர் "லொக் அவுட்" செய்து வெளியேறும் போதும் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

பிறீமியர் விளம்பரங்கள் என சில விளம்பரதாரர்களின் ஸ்ரேற்றஸ்கள், வீடியோக்கள் மற்றும் சுட்டிகள் வலதுபுறத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், நீங்கள் "லைக்" செய்யாத பக்கங்களின் விளம்பரங்களும் இங்கு காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர முக்கிய மாற்றமாக இதுவரை காலமும் தனிப்பட்ட பேஸ்புக் கணக்குகளுக்கு வழங்கப்பட்டிருந்த "டைம் லைன்" வசதி, இப்போது பேஸ்புக் பக்கங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 30ஆம் திகதி வரை பேஸ்புக் பக்கங்கள் விரும்பினால் பழைய வடிவத்தைக் கொண்டிருக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, மார்ச் 30ஆம் திகதிக்குப் பின்னர் தானாக அனைத்துப் பேஸ்புக் பக்கங்களும் புதிய டைம் லைன் வடிவத்திற்கு மாற்றப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது.

புதிய டைம் லைன் வடிவத்தில் பேஸ்புக் பக்கமொன்றின் ரசிகர்கள் அந்த பேஸ்புக் பக்கத்திற்கு தனிப்பட்ட செய்தியை அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பான அம்சமாகும்.

அத்தோடு பேஸ்புக் பக்கங்களை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்கு இலகுவான கையாளுகையை வழங்கும் பொருட்டு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, மேம்படுத்தப்பட்ட தரவுகளும் வழங்கப்படவுள்ளதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.


  Comments - 0

  • MAYOORAN Thursday, 15 March 2012 02:43 AM

    இலங்கை

    Reply : 0       0

    Stella Saturday, 17 March 2012 12:32 AM

    கருத்துக்களுக்கு நன்றி. எப்படி புதிய டைம் லைன் உருவாக்குவது,plz

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X