Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 மார்ச் 06 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேஸ்புக் பாவனையாளர்களின் கடவுச்சொற்களைத் (பாஸ்வேர்ட்ஸ்) தருமாறு மின்னஞ்சல் மூலம் ஒருபோதும் பேஸ்புக் கோராது எனவும், அவ்வாறான மின்னஞ்சல்கள் கிடைக்கப்பெறின் அவற்றை நம்பத் தேவையில்லை எனவும் பேஸ்புக் அறிவித்துள்ளது. அத்தோடு பேஸ்புக் கணக்கிற்கு உள்நுழையும் சந்தர்ப்பம் தவிர, இரண்டே இரண்டு சந்தர்ப்பங்களில் மாத்திரம் உங்கள் கடவுற்சொற்களை பதியுமாறு பேஸ்புக் கோரும் எனவும் ஏனைய எந்தச் சந்தர்ப்பங்களிலும் உங்கள் கடவுச்சொற்களை எங்கும் தட்டச்ச வேண்டாம் எனவும் பேஸ்புக் அறிவித்துள்ளது.
உங்கள் கணக்கு விபரங்களை மாற்ற முற்படும் போதும், உங்கள் புரொபைல் விபரங்களை மாற்ற முற்பட்டு 20 நிமிடங்கள் கடந்தால் அதன்போதும் மாத்திரமே பேஸ்புக் உங்கள் கடவுச்சொற்களைக் கோரும் எனவும் பேஸ்புக் அறிவித்துள்ளது.
20 நிமிடங்கள் ஏன் என்ற விபரத்தையும் பேஸ்புக் விபரமாக அறிவித்துள்ளது. இதன்படி, உங்கள் புரொபைலில் காணப்படும் மின்னஞ்சல், தொலைபேசி இலக்கம், உங்கள் பேஸ்புக் பக்கங்களின் நிர்வாகிகள் ஆகியோரை மாற்ற முற்பட்டு அப்பக்கங்களுக்குச் சென்று 20 நிமிடங்கள் கடந்தால் பேஸ்புக் உங்கள் கடவுச்சொல்லை தட்டச்சுமாறு கோரும். உங்கள் கணக்கின் அணுக்கம் (கணக்கின் அக்ஸஸ்) உங்களிடம் இன்னமும் உள்ளது என்பதை உறுதிப்படுத்தவே உங்கள் கடவுச்சொல் இங்கு கேட்கப்படும். காரணம், அப்பக்கங்களிற்கு நீங்கள் சென்ற பின்னர் நீங்கள் மறந்து உங்கள் கணினியை விட்டு வேறெங்காது சென்றுவிடின் வேறு நபர்கள் உங்கள் விபரங்களை மாற்றுவதைத் தடுக்க பேஸ்புக் விரும்புவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.
ஆகவே அதைத் தவிர, பேஸ்புக் உங்கள் கணக்கு விபரங்களையோ, கணக்கின் கடவுச்சொல்லையோ ஒருபோதும் மின்னஞ்சல் ஊடாக கோராது எனவும், உங்கள் கடவுச்சொல்லையோ அல்லது கணக்கின் அணுக்கத்தையோ நீங்கள் இழந்திருந்தால் உடனடியாக பேஸ்புக்கிற்கு சென்று உங்கள் கணக்கை மீளப் பெறுமாறும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. உங்களது மின்னஞ்சலும் ஹக்கர்களினால் களவாடப்பட்டிருப்பின் உங்கள் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, வாகன ஓட்டுனர் அட்டை போன்றவற்றில் ஏதாவதொன்றைச் சமர்ப்பித்து கணக்கை மீளப் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. (க்ரிஷ்)
20 minute ago
55 minute ago
musathik maas Monday, 10 March 2014 12:18 PM
எனது மின்னஞ்சல் சரியானது... ஆனால் உறுதி செய்யுமாறு முகநூலில் கேட்டால் என்ன செய்வது...???
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
55 minute ago