Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 மார்ச் 08 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்பிள் நிறுவனம் புதிய ஐபாட் வகையினை நேற்றைய தினம் அறிமுகப்படுத்தியது. 4ஜி தொழிநுட்பத்தைக் கொண்ட 9.7 அங்குல தெளிவான திரையைக் கொண்டதாக இக்கருவி அமையவுள்ளது. இதனை “ஐபாட் 3“ என அழைக்கவுள்ளதாக செய்திகள் முன்னதாக வெளிவந்திருந்த போதிலும், இதனை "புதிய ஐபாட்" என அழைப்பதாக அப்பிள் நிறுவனம் தெளிவுபடுத்தியது.
புதிய ஐபாட் - 5 மெகா பிக்ஸல் கமெராவைக் கொண்டாக அமையவுள்ளதோடு, ஐபோன் 4 எஸ் இலுள்ள அதே வகையான சென்ஸரை அக் கமரா கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐபாட்டின் திரையின் தெளிவு மிகச்சிறப்பானதாக அமையும் எனத் தெரிவித்த அப்பிள் நிறுவனத்தில் உலகளாவிய சந்தைப்படுத்தலின் சிரேஷ்ட உப தலைவர் பில் ஸில்லர், ஐபாட் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் அற்புதமாகக் காணப்படும் எனவும் தெரிவித்தார்.
புதிய ஐபாட் 499 அமெரிக்க டொலர்கள் தொடக்கம் விற்பனை செய்யப்படவுள்ளது. எதிர்வரும் மார்ச் 16ஆம் திகதி ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம், கனடா, சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், ஹொங் கொங், சிங்கப்பூர், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் “புதிய ஐபாட்“ விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கறுப்பு, வெள்ளை ஆகிய வர்ணங்களில் காணப்படவுள்ளது.
ஃவை ஃபை மாத்திரம் கொண்ட 16 ஜிபி ஐபாட்கள் 499 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கும், 32 ஜிபி ஐபாட்கள் 599 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கும், 64 ஜிபி கொண்ட ஐபாட்கள் 699 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
4 ஜி வகையான தொழிநுட்பத்தைக் கொண்ட ஐபாட் களில் 16 ஜிபி கொள்ளளவைக் கொண்ட ஐபாட்கள் 629 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கும், 32 ஜிபி கொண்டவை 729 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கும், 64 ஜிபி கொண்டவை 829 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன. (க்ரிஷ்)
5 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
23 minute ago