Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜனவரி 20 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அலைபேசிகளை பயன்படுத்துபவர்கள் அதிக முகங்கொடுக்கும் பிரச்சினை அடிக்கடி சார்ஜ் குறைவது ஆகும். அதிலும் ஸ்மார்ட் அலைபேசிகளை பயன்படுத்தும் போது மிக விரைவில் பெற்றரி சார்ஜ் குறைந்துவிடும். எனவே அடிக்கடி சார்ஜ் ஏற்ற வேண்டிய தேவை ஏற்படும்.
அதிலும் பெற்றரி முழுமையாக சார்ஜ் ஆவதற்கு குறைந்தது சில மணி நேரங்கள் எடுக்கும். தற்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு நிமிடங்களில் பெற்றரிக்கு முழுமையாக சார்ஜ் ஏற்ற முடியும் என்று கூறினால் அதனை நம்புவீர்களா? ஆம் இப்போது அதனை சாத்தியப்படுத்தி விட்டனர் இஸ்ரேலிய நிபுணர்கள்.
பொதுவாக சார்ஜ் ஏற்றுவதற்கு அதிக நேரம் தேவைப்படும் பெற்றரிகளுக்கு மாற்றீடாக குறைந்த நேரத்தில் அதுவும் 2 நிமிடங்களிலேயே முழுமையாக சார்ஜ் ஆகக்கூடிய பெற்றரி ஒன்றை இஸ்ரேல் நிறுவனம் வடிவமைத்து உள்ளது.
ஸ்டோர் டொட் எனப்படும் நிறுவனம் வடிவமைத்துள்ள இந்த பெற்றரியானது, சாதாரண பெற்றரியை விட சற்று வித்தியாசமானது.
இதன் உள்வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டு உள்ளதால், அதிவிரைவில் சார்ஜ் ஏற்ற முடியும். 2 நிமிடத்தில் முழுவதும் சார்ஜ் ஆகும் இந்த பெற்றரி மூலம், 5 மணி நேரம் பயன்பெற முடியும்.
எனினும் இந்த அதிநவீன பெற்றரி, சாதாரண பெற்றரிகளைவிட குறைவான ஆயுளையே கொண்டுள்ளது.
மேலும் இந்த பெற்றரியின் விலையும் அதிகம். அதன்படி இந்த பெற்றரியுடன்; கூடிய அலைபேசியின் விலை, சாதாரண விலையை விட சுமார் ரூ.6000 அதிகம் செலுத்த வேண்டும்.
தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற அலைபேசிகளில், இந்த பெற்றரியை இணைக்க வேண்டுமென்றால், சில மாற்றங்களை செய்ய வேண்டியது குறிப்பிடத்தக்கது.
ஆக இன்னும் சில நாட்களில் 2 மினிட்ஸ் நூடில்ஸ் மாதிரி 2 மினிட்ஸ் பெற்றரி ரெடி...
(ஜோ)
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago