2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

Ai யால் சிந்திக்கும் ஆற்றல் 47 சதவீதம் குறையும்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தகவல் தொழில்நுட்ப உலகின் புதிய புரட்சியாக செயற்கை நுண்ணறிவு தளங்கள் மாறிவிட்டன. சாட்ஜிபிடி, குரோக், ஜெமினி ஏஐ என பல்வேறு செயற்கை நுண்ணறிவு தளங்கள் உள்ளன. எனினும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடியே பயனர்கள் மத்தியில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

எந்த ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் உடனடியாக சாட்ஜிபிடியில் சந்தேகத்தை உடனே தீர்த்துக்கொள்கிறார்கள். அந்த அளவு சாட்ஜிபிடி தற்போது இணைய பயன்பாட்டாளர்கள் இடையே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு தளங்களால் மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் நாளடைவில் மழுங்கிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கும் தகவலாக இருந்தது.

இந்த நிலையில், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகர முடிவுகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சாட்ஜிபிடி பயனர்களின் மூளையை ஆராய்ந்து முடிவை வெளியிட்டுள்ளது. 

கடந்த 4 மாதங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சாட்ஜிபிடி பயன்படுத்துவர்களின் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47 சதவீதம் குறைந்துவிட்டதாம்.

அதாவது, சில நிமிடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு வாக்கியத்தை பலருக்கும் நினைவில் வைக்க முடியவில்லையாம். அதேவேளையில், ஏஐ பயன்படுத்தாமல் எழுதியவர்களுக்கு இந்த பிரச்சினை எற்படவில்லை. இது ஏஐ பயன்பாடு மனிதனின் சிந்திக்கும் ஆற்றலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .