2026 மே 21, வியாழக்கிழமை

WhatsApp அப்டேட்: படித்தவுடன் மெசேஜ்கள் தானாக மறையும்

Janu   / 2026 மே 21 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாட்ஸ்அப்பில் (WhatsApp) பயனர்கள் அனுப்பும் அல்லது பெறும் மெசேஜ்களைப் படித்தவுடன், அவை தானாகவே மறையும் வகையிலான ‘After Reading’ என்ற புதிய அம்சம் விரைவில் அறிமுகமாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும் குரல்/வீடியோ அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்காக இத்தளம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது பள்ளிகள் முதல் அலுவலகங்கள் வரை, தனிப்பட்ட மற்றும் குழு தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு முக்கிய தளமாகவும் இது மாறியுள்ளது.

இந்நிலையில், பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்கள் மற்றும் அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், பயனர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் மெசேஜ்களை வாசித்தவுடன் அவை தானாகவே அழிந்துவிடும் ‘After Reading’ என்ற புதிய அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது சோதனை செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்கள் மற்றும் சோதனை அம்சங்கள் குறித்துத் தொடர்ந்து துல்லியமான தகவல்களை வெளியிட்டு வரும் 'டபிள்யூஏபீட்டாஇன்போ' (WABetaInfo) தளம் இத்தகவலை முதன்முதலாகப் பகிர்ந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X