2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

சில அலைபேசிகளில் இனிமேல் WhatsApp வேலை செய்யாது

Editorial   / 2025 ஏப்ரல் 30 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன் (Android Version) கொண்ட அலைபேசிகளை வைத்திருந்த பயனர்களுக்கு (யூசர்களுக்கு) நடந்ததை போலவே இப்போது ஐபோன்களை (iPhones) வைத்திருக்கும் பயனர்களுக்கும் (யூசர்களுக்கும்) நடக்க இருக்கிறது. 

சில பழைய ஐபோன்களில் வாட்ஸ்அப் (WhatsApp) சேவை மே 5ஆம் திகதி முதல் நிறுத்தப்பட இருக்கிறது. 

ஆகவே, அதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு வேறு வகைகளுக்கு மாறுவது நல்லது. எந்தெந்த வகைகளில் வாட்ஸ்அப் வேலை செய்யாது? எந்த ஐஓஎஸ் வெர்ஷன் (iOS Version) நிறுத்தப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். 

ஆண்ட்ராய்டு பயனர்களும் சரி, ஐஓஎஸ் பயனர்களும் சரி, வாட்ஸ்அப் ஆப்-ஐ பயன்படுத்தி வருகின்றனர். இதில் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் முக்கிய விவரங்கள் அதிகம் பகிரப்படுகின்றன. இதனால், போதுமான பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் ஆண்ட்ராய்டு வெர்ஷன் மற்றும் ஐஓஎஸ் வெர்ஷனில் வாட்ஸ்அப் சேவை (WhatsApp Services) நிறுத்தப்பட்டு வருகிறது. 

ஆனால், இது மிகவும் பழைய வெர்ஷன்களில் மட்டுமே இப்படி செய்யப்படுகிறது. ஆகவே, ஒட்டுமொத்த கஸ்டமர்களும் கவலைப்பட வேண்டியது இல்லை. ஐஓஎஸ் 12 (iOS 12) அல்லது அதற்கு மேலான வெர்ஷன்களில் இப்போது வாட்ஸ்அப் சேவை தடையில்லாமல் கிடைக்கிறது. இருப்பினும், ஐஓஎஸ் 15.1 (iOS 15.1) வெர்ஷனிலும் மினிமம் பீச்சர்களுடன் வாட்ஸ்அப் கிடைக்கிறது. 

ஆகவே, இதற்கு முன்னதாக வெளியான ஐஓஎஸ் வெர்ஷன்களை கொண்ட ஐபோன்களில் மே 5ஆம் திகதியில் இருந்து வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று மெட்டா நிறுவனம் அறிவித்தது. 

இந்த அறிவிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியானது. ஆகவே, 5 மாதங்களுக்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களுக்குள் ஐஓஎஸ் 15.1 அல்லது அதற்கு மேலான வெர்ஷன்களுக்கு மாற வேண்டும். இல்லையென்றால், அதற்கு முன்னதாக இருக்கும் வெர்ஷன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது.

 இதற்கு முன்னதாக எந்த வெர்ஷன் இருக்கிறது என்று பார்த்தால், ஐஓஎஸ் 12.5.7 (iOS 12.5.7) இருக்கிறது. இந்த வெர்ஷனில் ஐபோன் 5எஸ் (iPhone 5s), ஐபோன் 16 (iPhone 6) மற்றும் ஐபோன் 6 பிளஸ் (iPhone 6 Plus) மாடல்களில் வருகின்றன. ஆகவே, இதில் வாட்ஸ்அப் வேலை செய்யாது. 

மே 5ஆம் திகதி வரையில் காலஅவகாம் இருக்கிறது. இதற்குள் ஐஓஎஸ் 15.1 அதற்கு மேலான வெர்ஷன்களுக்கு அப்டேட் செய்துகொள்வது நல்லது. அந்த மாடல்களுக்கு ஐஓஎஸ் 15.1 வெர்ஷன் அப்டேட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகவே, ஐபோனில் செட்டிங்ஸ் சென்று ஜெனரல் டேப்-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள். பிறகு சாப்ட்வேர் அப்டேட் தோன்றும். அதில் அப்டேட் இருந்தால் செய்து முடியுங்கள். இல்லையென்றால், இனிமேல் அவற்றில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. 

ஏற்கனவே, ஜனவரி 1ஆம் திகதி முதல் பல்வேறு ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டது. அதில், சாம்சங் கேலக்ஸி எஸ்3, சாம்சங் கேலக்ஸி நோட் 2, சாம்சங் கேலக்ஸி ஏஸ் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்4 மினி ஆகிய போன்களும் அடங்கும். 

அதேபோல மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் ஜெனரேஷன் மடலான மோட்டோ ஜி, மோட்டோரோலோ ரேசர் எச்டி, மோட்டோ ஈ 2014 மாடல்களிலும் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டது. மேலும், சோனி எக்ஸ்பிரீயா இசட், சோனி எக்ஸ்பிரீயா எஸ்பி, சோனி எக்ஸ்பிரீயா டி மற்றும் சோனி எக்ஸ்பிரீயா வி மாடல்களிலும் நிறுத்தப்பட்டது. இப்படி பல்வேறு மாடல்கள் பட்டியலில் இருக்கின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .