Editorial / 2026 ஜனவரி 21 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

சாங்கி விமான நிலையத்தில் பயணப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் தானியக்க வாகனங்கள் அறிமுகமாகியுள்ளன.ஆளின்றி இயங்கும் வாகனங்களைக் களமிறக்குவது இதுவே முதல் முறை.
சிங்கபூர் பிரதியமைச்சர் சுன் ஷுவெலிங் (Sun Xueling) வாகனங்களை அறிமுகம் செய்தார். மூப்படையும் ஊழியரணியின் சுமையைக் குறைக்கப் புதிய முயற்சி உதவும் என்றார் அவர்.
மோசமான வானிலை காரணமாகச் சேவைத் தடங்கல் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கவும் வாகனங்கள் கைகொடுக்கலாம் என்றார்
வாகனங்களின் சோதனை ஓராண்டுக்கு நடந்தது; 5,000க்கும் அதிகமான சோதனைப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.வாகனங்களில் கேமராக்களும் உணர்கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
250 மீட்டர் தொலைவில் இருப்பவற்றை வாகனங்களால் கண்டறிய முடியும். அதன்படி பாதையில் இடையூறு தென்பட்டால் அதைத் தவிர்த்து விலகிச் செல்ல முடியும்.
பணியாளர்கள் வாகனங்களைக் கவனிப்பார்கள்; தேவை இருந்தால் செயல்பாட்டில் தலையிடுவார்கள். அவர்கள் வாகனம் ஓட்டுவதிலிருந்து விடுபட்டு மற்ற வேலைகளைச் செய்யலாம். வாகனங்கள் தற்போது முனையம் ஒன்றிற்கும் நான்கிற்கும் இடையே சேவையாற்றுகின்றன.
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
1 hours ago