Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 மே 28 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழில்நுட்பத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு (AI), தற்போது அதன் படைப்பாளர்களைக் கூட பயமுறுத்தும் நிலையை எட்டியுள்ளதா என்ற சந்தேகங்கள் உள்ளன.
சமீபத்தில், ஒரு பிரதான AI மாதிரி அதன் மேம்பாட்டாளரை மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொழில்நுட்ப வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஆந்த்ரோபிக் என்ற நிறுவனம், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் 'கிளவுட் ஓபஸ் 4' என்ற AI அஸிஸ்டன்டை உருவாக்கியுள்ளது.
இது மனிதர்களைப் போலவே தொடர்பு கொள்ளவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும், எழுதவும், ஆவணங்களின் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்யவும், குறியீட்டு முறை போன்ற பணிகளைச் செய்யும். இந்த மாதிரி சமீபத்தில் சந்தைக்கு வந்தது.
அதன் வெளியீட்டிற்கு முன்பு, இந்த AI இல் பல சோதனைகளை நடத்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
கிளவுட் ஓபஸ் 4 இன் செயல்திறனை மதிப்பாய்வு செய்யும் ஒரு மேம்பாட்டாளர், எதிர்காலத்தில் கிளவுட்டின் மிகவும் நவீனமான மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கிளாட் ஓபஸ் 4 கடுமையாக எதிர்வினையாற்றியதாகத் கூறப்படுகிறது.
தன்னை நீக்கி புதிய பதிப்பை, மேம்பாட்டாளரின் 'ஒழுங்கற்ற உறவை'அம்பலப்படுத்துவேன், தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவேன் என்று அவரை AI எச்சரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த எதிர்பாராத பதிலால் மேம்பாட்டாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த நடத்தை ஒப்பீட்டளவில் அரிதாக இருந்தாலும், அதன் முந்தைய மாதிரிகளை விட கிளாட் ஓபஸ் 4 இல் இது அடிக்கடி நிகழ்ந்ததாக ஆந்த்ரோபிக் குறிப்பிட்டது.
இந்த எதிர்வினைகள் சோதனை சூழல்களில் மட்டுமே வெளிப்படும் என்றும், AI இன் இயல்பான செயல்பாட்டு நடத்தையை அவை பிரதிபலிக்காது என்றும் ஆந்த்ரோபிக் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
ஆயினும்கூட, இந்த சம்பவங்கள் AI அமைப்புகள் எவ்வாறு நடந்துகொள்ளக்கூடும் என்பது குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன.
10 minute ago
12 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
1 hours ago
2 hours ago