Editorial / 2026 ஏப்ரல் 24 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைத்தளங்களில் தவிர்க்க முடியாத ஒரு செயலியாக வாட்ஸ்அப் (WhatsApp) உருவெடுத்துள்ளது. இந்தியாவில் மட்டும் 51 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்தி வருகின்றனர். 2009-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ்அப்பை, 2014-ஆம் ஆண்டில் மெட்டா (Meta) நிறுவனம் வாங்கியது. அதன்பிறகு, வாட்ஸ்அப்பில் பல்வேறு புதிய மாற்றங்களும் அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், கோப்புகளைப் பகிரும் வசதி என வாட்ஸ்அப்பில் தகவல் பரிமாற்றம் ஏற்கனவே மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் யுபிஐ (UPI) பணப்பரிவர்த்தனை வசதி உள்ள நிலையில், தற்போது பயனர்களைக் கவரும் விதமாகப் புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வாட்ஸ்அப் யுபிஐ மூலமாகவே இனி மொபைல் போன்களுக்கு ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். தற்போது ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய நிறுவனங்களின் சிம் கார்டுகளுக்கு வாட்ஸ்அப் யுபிஐ மூலம் ரீசார்ஜ் செய்யலாம். பி.எஸ்.என்.எல். (BSNL) பயனர்களுக்கு விரைவில் இந்த வசதி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago