2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அலங்கார உற்சவப் பெருவிழா

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.செல்வராஜா

பதுளை- ரொக்கில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா, எதிர்வரும் 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 23ஆம் திகதி நடைபெறும் பிராயசித்த அபிஷேகம் மற்றும் வைரவர்மடையுடன் நிறைவுபெறும்.

கொடியேற்ற நிகழ்வை தொடர்ந்து எதிர்வரும் 1ஆம் திகதி வரை விசேட உபயங்கள் இடம்பெற்று 20ஆம் திகதி பால்குடபவனி, தீமிதிப்பு மற்றும் 1008 சகஸ்ர சதசங்காபிஷேகம் என்பன இடம்பெறும்.

21ஆம் திகதி முத்தேர் பவனியும்  22ஆம் திகதி தீர்த்தோற்சவமும் கொடியிறக்கமும் அக்கினிசட்டி அம்மன் கரகஊர்வலம், மாவிளக்கு பூசைஆகியன இடம்பெற்று, மாலை திருவூஞ்சல் மற்றும் பூங்காவனம் உற்சவம் என்பன நடைபெறும்.

23ஆம் திகதி காலை பிராயசித்த அபிஷேகம், அம்பாளுக்கான குளிர்த்தி பூசைகள் மற்றும் வைரவர்மடையும் இடம்பெற்றும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .