Niroshini / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,வடமலை ராஜ்குமார்
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை வருடா வருடம் நடத்தும் வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய மஹோற்சவ ஆன்மீக பாதயாத்திரை நேற்று சனிக்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.
இந்த பாத யாத்திரை தொடர்ந்து ஆறு நாட்கள் இடம்பெற்று எதிர்வரும் 01ஆம் திகதி பிற்பகல் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இப்பாத யாத்திரையில், பேரவை பிரதிநிதிகள், இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இப்பாத யாத்திரையானது பிரதான வீதி வழியாக உள்ள அனைத்து ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்யப்படும்.
இப்பாத யாத்திரையில் கலந்துகொள்ளும் பக்த அடியார்களுக்கு வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் சென்றடையும் வரை உணவு வசதிகள் வழங்கி வைக்கப்படும் என ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.


9 hours ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Jan 2026