2025 ஜனவரி 25, சனிக்கிழமை

கொட்டாஞ்சேனையில் வைகுண்ட ஏகாதசி

Editorial   / 2025 ஜனவரி 06 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-13, இல. 188, புதுச்செட்டித்தெரு, ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலயத்தில்  வெள்ளிக்கிழமை (10)  வைகுண்ட ஏகாதசி திருநாள் கொண்டாடப்படும்.

வருடத்தில் பன்னிரண்டு மாத காலத்தின் தலையாய மாதம் - கேசவ மாதம் எனப்படும் பிரம்ம முகூர்த்தமாக மார்கழி மாதம் விளங்குகிறது.

அந்நாளில் பகவானின் தரிசனத்திற்காக தேவர்கள் வைகுண்ட வாசலில் காத்து நிற்கும் சமயம் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு அனைவருக்கும் தரிசனம் கொடுக்கும் திருநன்னாள். அந்நாளில் பகவானின் நாமங்களையும் புகழையும் பாடி அவர் சிந்தனையில் மூழ்கியிருப்பது சிறந்தது.

ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலயத்தில் அன்றைய தினம்காலை 5.00 முதல் இரவு 9.00 மணிவரை பகவத் தரிசனமும் நாமம் ஜெபித்தல், பாடுதல்,  அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X