Editorial / 2025 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்
கட்டைக் காட்டு புனித கப்பலேந்தி மாதாவின் திருத்தலத்தின் மாபெரும் திருவிழாவான ஆவணி மாத திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மிகவும் சிறப்பாக வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பங்கின் வரலாற்று சிறப்புமிக்க கப்பலேந்தி மாதாவின் ஆலய திருவிழாவானது புதிதாக நிறுவப்பட்ட கப்பலேந்தி மாதாவின் திருச்சொரூப ஆசிர்வாதத்துடன் ஆரம்பமானது.
இத் திருவிழா திருப்பலி ஆனது கட்டைக்காட்டு பங்கு தந்தை வன பிதா அமல்ராஜ் தலைமையில் ஆரம்பமாகியதுடன் கூட்டுத் திருப்பலியாக திருவிழா திருப்பலி ஆனது ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து புனித கப்பலேந்தி மாதாவின் திருச்சொரூப பவனியும், அதனை தொடர்ந்து கப்பலேந்தி மாதாவின் ஆசீர்வாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.





18 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago