2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கல்லறை பெருநாள் அனுஷ்டிப்பு

Niroshini   / 2015 நவம்பர் 02 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க மக்களினால் இன்று திங்கட்கிழமை கல்லறை பெருநாள் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் ஓர் அங்கமாக அம்பாறை,சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் சேமக்காலையின் வளாகத்தில் இறந்த ஆத்மாக்களுக்கு திருப்பலி இடம்பெற்றது.

திருப்பலியினை சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் பங்குத் தந்தை எஸ்.திருச்செல்வம் ஓப்புக் கொடுத்தார்.

இதன்போது,இறந்தவர்களின் உறவினர்கள் கல்லறையை அலங்கரித்து தீபம் ஏற்றி இறந்தவர்களை நினைவு கூர்ந்ததுடன் கல்லறைகளையும் ஆசீர்வாதம் செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .