Editorial / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

குழந்தை கிருஷ்ணரை தொட்டிலிலிட்டு தாலாட்டும் வாய்ப்பு ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஆலய ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி விழாவில் பக்தர்களுக்குக் கிடைக்கவிருக்கிறது.
சர்வதேச கிருஷ்ண பக்தி கழகத்தினரின் இலங்கைக் கிளையினரால் கொழும்பு கொட்டாஞ்சேனையில் நடத்தப்பட்டுவரும் ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஆலயத்தில் இம்மாதம் 19 வெள்ளிக்கிழமையன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா அவதரித்த நன்னாள் ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும்.
அன்றைய தினம் அதிகாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை விஷேட ஆராதனைகள் நடைபெறும். காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தியைத் தொடர்ந்து துளசி ஆரத்தி மற்றும் தர்சன ஆரத்தி, குரு பூஜை நடைபெற்று குழந்தை கிருஷ்ணருக்கு வலம்புரி சங்கினால் பால் அபிஷேகமும் ஆராதனையும் செய்யப்படும்.
அதனைத்தொடர்ந்து குழந்தை கிருஷ்ணரை தொட்டிலிலிட்டு பக்தர்கள் தாலாட்டும் வைபவம் இடம்பெறும்.
பிற்பகல் 12:30 மணிக்கு ராஜபோக ஆரத்தியும் மாலை தூப ஆரத்தி, துளசி ஆரத்தி, சந்திய ஆரத்தி நடைபெற்று குழந்தைகிருஷ்ணரை தொட்டிலிலிட்டு; பக்தர்கள் தாலாட்டும் வைபவம் இடம்பெறும்.
இரவு 8 மணிக்கு ஸ்ரீஸ்ரீ ராதா ராதாகிருஷ்ணருக்கு மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து விசேட ஆராதனை நடைபெற்றபின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். பக்தர்கள் அபிஷேகத்திற்கு வேண்டிய பால், இளநீர், பழம், பூக்கள் மற்றும் தேவையான பொருட்களையும் கொண்டு வந்து கொடுக்கலாம்.
சனிக்கிழமை வியாச பூஜை
மறுநாள் 20 ஆம் திகதி சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கிருஷ்ண பக்திக் கழக ஸ்தாபகரும், ஆன்மீகக் குருவுமான அருட்திரு பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் வியாச பூஜை நடைபெறும். பக்தர்கள் இந்த விழாக்களில் கலந்துகொண்டு பகவான் அருளைப்பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
14 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago