Editorial / 2024 மார்ச் 31 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை ஐக்கிய இந்து குருமார் சங்கம் மற்றும் ஸ்ரீ வித்யா வேத பாடசாலை (குருகுலம்) பத்தாவது ஆண்டு விழா கொட்டக்கலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய மண்டபத்தில் (31) காலை முதல் இடம்பெற்றது.
அகில இலங்கை ஐக்கிய இந்து குருமார் சங்க தலைவர் சாகித்திய சிரோமனி சிவஸ்ரீ ச.ஸ்கந்தராஜ குருக்கள் தலைமையில் இந்த நிகழ்வு வெகு விமர்சையாக இடம்பெற்றது.
விழாவில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
அத்துடன் நாட்டில் வடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட பல பாகங்களிலும் இருந்து வருகைத்தந்த இந்து குருமார்களுடன் ஊடகவியலாளர்கள், கல்வி சமூகத்தினர், சமூக சேவையாளர்கள்,ஆலய பரிபாலன சபையினர், கலைஞர்கள் மற்றும் வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் நூல் வெளியீடு,புத்தக கண்காட்சி,சிறப்பு ஆன்மீக உரை,கலை நிகழ்வு ஆகியவற்றுடன் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்.





5 minute ago
18 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
18 minute ago
1 hours ago
2 hours ago