Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
அம்பாறை மாவட்டத்தின் மல்வத்தை தம்பிநாயகபுரம் ஸ்ரீ குளத்தடிப் பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) காலை 7.30க்கு இடம்பெற இருக்கின்றது.
அதற்கான கிரியைகள் யாவும், நாளை புதன்கிழமை (07) ஆரம்பமாகின்றது. நாளை மறுநாள் வியாழக்கிழமை (08) எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெறவுள்ளது.
கோவில் பிரதம குரு சிவஸ்ரீ புண்ய கிருஷ்ணகுமாரக் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது .
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல அபிஷேக பூசைகள், எதிர்வரும் 10ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நடைபெற்று, இறுதியில் 21ஆம் திகதி சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்துக்கான பாற்குட பவனி, 21ஆம் திகதி காலை திருவள்ளுவர்புரம் மகாவிஷ்ணு கோவிலில் இருந்து பவனிவர இருப்பதாக கோவில் பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago